தேவதை
உன் தோளில்
என் கைகளாய்
நம் பகல்
பெரும் இரவுகளை
போர்வைக்குள் கழிக்கிறோம்
நாம்
மார்புகள் அழுந்த
முதுகில் சாய்ந்திருக்கிறாய்
காலையில்
எப்பொழுதும் பிறர்க்கு
தெரியா
நிழலாகயிருக்கிறாய்
கடவுள் நம்பிக்கை
இருக்கிறதோ இல்லையோ
தேவதை நம்பிக்கை
கண்டிப்பாய் இருக்கிறது
ஹே மது, நீ, நான் கவிதை எழுதுவேன்னு சொல்லும்போதெல்லாம் நான் ரொம்ப சிரிச்சுருக்கேன் ... ஆனா இந்த கவிதைய பாக்கும்போதுதான் நீ எவ்ளோ நல்லா கவிதா எழுதுறேன்னு தெரியுது .. simply superb ... சான்சே இல்ல .....
ReplyDeletebut சில வார்த்தைகள்
கதை கட்டுரைகள்ல கூட எழுத்துப்பிழை இருக்கலாம் ஆனா கவிதைல மட்டும் இருக்கக் கூடாது ... அத மட்டும் திருத்திக்கோ ... என்னை பொறுத்தவரை பொதுவா ஒரு வாசகரோட எதிர்பார்ப்ப முடிந்தவரை அதிகரிக்க வைக்கணும் ... நாம சொல்ல வர்ற விசயங்கள்ல இருக்குற suspense முடிந்தவரை கடைசி வரை காப்பாத்தணும் ... இங்க "கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ" நு நீ சொல்லும்போது கண்டிப்பா வேறொரு நம்பிக்கை உனக்கு இருக்குனு தெரியுது ஆனா அது என்ன என்பதுதான் suspense .. ஆனா அந்த suspense அ நீ "தேவதை நம்பிக்கை" நு அடுத்த வரிலயே உடைச்சுற ... அத நீ "கண்டிப்பாய் இருக்கிறது தேவதை நம்பிக்கை" நு எழுதி இருந்தா இன்னும் நல்லா இருக்கும் ... ஆனா இதுலாம்தான் கவிதைக்கான இலக்கணம்னு நான் எதுவும் சொல்ல வரல ... just this is my point of view ... but உன்னுடைய வரிகள் straight forward ஆ simple ஆ இருக்கு ... மற்றபடி நலம் நலமறிய ஆவா ;)
- Siva