Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, February 4, 2012

சாதாரணன்





1. குழு உரையாடல்களில்
எப்போதும் இருவர்
பின்னால் கவனித்து கொண்டிருப்பேன்


நினைவு கூறத்தக்க
ஆடைகளை நான்
ஒருபோதும் அணிந்ததில்லை

எனது குரலைகூட
ஒருசில சமயங்களில்
மட்டுமே கேட்டிருப்பீர்கள்

எனது தரவரிசையும்
எப்போதும் கவனம் பெறாத
சராசரியிலே  அமைந்திருந்தது

எவ்வகையிலும் நான்
சுவரசியமானவன் கிடையாது
மற்றும்
எனது கால்கள் தடங்களை
தவறியும் பதிப்பதில்லை

எக்காலத்திலும்
அடையாளமின்மையே எனது
அடையாளம்
ஆம்
என்னை நீங்கள்
நினைவு கூறுவது
சற்று கடினம்தான்
--o--

2.எந்நேரமும்

காலை சுரண்டும்
மீன் போன்ற


என் காதலை
உன் தொடுகை
உன் சிரிப்பு
உன் சிலிர்ப்பு
உன் மென்மை
உன் புன்னகை
ஏன் உன் கோபம் கூட
தீ மூட்டும் போது
கண்ணே
நான் வேறு என்னதான் செய்யமுடியும்?
உன்னை தொல்லைபடுத்துவதை தவிர?