Wednesday, February 29, 2012


கசப்பு நிறைந்த
காலங்களிலே அனைத்து
சொற்களையும் தீர்த்துவிட்டோம்
சமதானத்திற்க்கென்று ஒரு சொல்லை கூட
மிச்சம் வைக்கவில்லை

இல்லையுதிர் காலத்தில்
அனைத்து இலைகளையும்
உதிர்த்த மரமாக
எஞ்சி நிற்க்கிறது நமது காதல்


வேரில் இருக்கும்
சிறு பச்சை மட்டுமே
வசந்தம் எனும்  
ஒரு காலம் வருமென்று
நம்பியிருக்கிறது.
வேறு வழியில்லை.


Saturday, February 4, 2012

சாதாரணன்





1. குழு உரையாடல்களில்
எப்போதும் இருவர்
பின்னால் கவனித்து கொண்டிருப்பேன்


நினைவு கூறத்தக்க
ஆடைகளை நான்
ஒருபோதும் அணிந்ததில்லை

எனது குரலைகூட
ஒருசில சமயங்களில்
மட்டுமே கேட்டிருப்பீர்கள்

எனது தரவரிசையும்
எப்போதும் கவனம் பெறாத
சராசரியிலே  அமைந்திருந்தது

எவ்வகையிலும் நான்
சுவரசியமானவன் கிடையாது
மற்றும்
எனது கால்கள் தடங்களை
தவறியும் பதிப்பதில்லை

எக்காலத்திலும்
அடையாளமின்மையே எனது
அடையாளம்
ஆம்
என்னை நீங்கள்
நினைவு கூறுவது
சற்று கடினம்தான்
--o--

2.எந்நேரமும்

காலை சுரண்டும்
மீன் போன்ற


என் காதலை
உன் தொடுகை
உன் சிரிப்பு
உன் சிலிர்ப்பு
உன் மென்மை
உன் புன்னகை
ஏன் உன் கோபம் கூட
தீ மூட்டும் போது
கண்ணே
நான் வேறு என்னதான் செய்யமுடியும்?
உன்னை தொல்லைபடுத்துவதை தவிர?